பாட்டு புஸ்தகம்

அடுத்த சனிக்கிழமை மாலை நிகழவிருக்கும் தம்பி வெட்டோத்தி சுந்தரம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இசையோடு சேர்த்து பாட்டு புஸ்தகம் கிடைக்கும் என்று இன்று தெரியவந்தது. இந்த பாட்டு புஸ்தக கான்செப்ட் இப்போது பெரிதாகப் புழக்கத்தில் இல்லை. முன்னொரு காலத்தில் என்னிடமே ஏராளமான பாட்டு புஸ்தகங்கள் இருந்தன. அட்டை என்று தனியாக இருக்காது. மட்டரக க்ரீமோ பேப்பரில் நடுவில் பின் அடித்து பிளாட்பாரத்தில் விற்பார்கள். இருபது காசு, நாலணா, ஐம்பது காசுகள் வரை விலை ஏறியது நினைவிருக்கிறது. … Continue reading பாட்டு புஸ்தகம்